Monday, January 9, 2023

 

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில், ராஜராஜ சோழன் புதல்வன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் பணிக்காக, சோழப் பேரரசின் தலைநகரம் 250 ஆண்டு காலம் கங்கை கொண்ட சோழபுரத்தில் செயல்பட்டது. 

Monday, September 13, 2021

 

 

ஒழுங்கு முறை விற்பனை கூட முறைகேடுகளை சரிசெய்ய வேண்டும்

செப் 14 செவ்வாய் தேசூரில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் கம்யூனிஸ்ட் கட்சி  கிளையின் முதல் மாநாடு இன்ற நடைபெற்றது. .பிரகாஷ் கொடியேற்றினார். .மணி தலைமை வகித்தார். அஞ்சலை வரவேற்று பேசினார்.

பிரதிநிதிகள் மாநாட்டை இடைக்குழு உறுப்பினர் ஜா.வே.சிவராமன் துவக்கி வைத்து பேசினார். . மணி கிளையின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு தோழர் விஜயா மாநாட்டை வாழ்த்திப் பேசினார். தீர்மானங்களை வேலு, செல்வி  ஆகியோர் முன்வைத்தனர்.



தேசூர் பேரூராட்சி 2 வது வார்டில் குடிநீர் பற்றாக்குறை, மயானத்திற்கு செல்ல பாதை வசதி, பழுதடைந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கேட்டு இயக்கம் நடத்தவேண்டும்,

தேசூர் பகுதியில் வீடற்ற நிலையில் உள்ளோருக்கு அரசு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்..ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலவும் முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சரி செய்ய வேண்டும்..

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

 

மாநாட்டை நிறைவு செய்து இடைக்குழு  உறுப்பினர் ச. தங்கமணி பேசினார்.

 

தோழர் தேவேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Thursday, July 9, 2020

Neerparavai - Devan Magale Video | N.R. Raghunanthan


மனம் கவர்ந்த மலர்கள் -7
பாடல், இசை, ஒளிப்பதிவு மட்டுமே ஒரு திரைப்படத்தை நிறைவு செய்துள்ள ஒரு சம்பவம், தமிழ்திரைப்பட வரலாற்றில் சில நிகழ்ந்துள்ளது.  திரையில் காட்டப்படும் காட்சியோடு ரசிகர்களை  ஒன்றியிருக்கச் செய்வதே, அந்த திரைப்படக் குழுவினரின் வெற்றியாகும்.
இந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை திரைப்படத்தில்,  கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளை, என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பிரம்மிக்க வைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில்,  “தேவன் மகளே..  தேவன் மகளே”  “பர பர பர பறவை ஒன்று”  “ரத்தக்கண்ணீர் முடியவில்லை” ஆகிய பாடல்களின் ஆளுமையில் கடல் பரப்பில் வாழ்வது போன்ற ஒரு உணர்வை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணு – சுனைனா நடிப்பில் உருவான பாடல்களை, இளம் பாடகர்கள் ஷ்ரேயா கோஷல், ஜி.வி.பிரகாஷ்குமார், வி.வி.பிரசண்ணா, சைந்தவி, ஹரிஷ் ராகவேந்திரா ஆகியோர் பாடியுள்ளனர்.        

Wednesday, July 8, 2020

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு-தமிழ் பாடல் ரசிகன்


மனம் கவர்ந்த மலர்கள் -6
பொதுவுடமை பாடிய கவிஞர்கள்
1964 ஆம் ஆண்டு படகோட்டி திரைப்படத்தில் “மண் குடிசை வாசலென்றால், தென்றல் வர மறுத்திடமா” என்று பாடல் எழுதிய கவிஞர் வாலி அவர்கள்,  அடுத்த ஆண்டு (1965) ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை”  என்றும் முற்போக்கு கருத்துக்களை விதைத்தார்.
1988 ஆம் ஆண்டு, உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில், “அக்கம் பக்கம் பாரடா சின்னராசா,” “உன்னால் முடியும் தம்பி, தம்பி” நஞ்சை உண்டு புஞ்சை உண்டு” போன்ற பாடல்களின் மூலம் முற்போக்கு கருத்துக்களை பரப்பியவர் புலவர் புலமைப்பித்தன். தொடர்ந்து முற்போக்கு கருத்தியல்கள் திரைப்படங்களில் தொடர வேண்டும் என்பது, திரை ரசிகர்கள் பலரது விருப்பமாக உள்ளது.    

ENNAI MARANTHATHEYN THENTRALEY PS @ KALANGHKARAI VILAKKAM FULL VIDEO


மனம் கவர்ந்த மலர்கள் – 5
சற்றேரக்குறைய 1380 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிமா நகரத்தை மகேந்திர வர்மரும், அவருக்கு பின் அவரின் மகன் நரசிம்மவர்மரும் ஆட்சி செய்கின்றனர்.
இந்த காலத்தில் அப்பர், திருஞானசம்பந்தர், சிறுதொண்டர் போன்ற  நாயன்மார்கள்  தமிழ் இலக்கியங்களை செம்மைப்படுத்தினர். மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டு,  சிற்பம், ஓவியம், அரசியல், கடல்வழி வணிகம் போன்ற துறைகளில், முத்தாய்ப்பு நிகழ்த்தப்பட்டது.  
சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி மற்றும் நாகநந்தியின் பகையும், வாதாபி படையெடுப்பும், தளபதி பரஞ்சோதியின் வல்லமையும் குறித்து,  கல்கியின் கைவண்ணத்தில் அறிகிறோம்.
இந்த காலச்சூழலில், மாமல்லபுர பாறை கற்களை, பவழ சிற்பங்களாக வடித்த ஆயன சிற்பியும், சிற்ப கலைக்கூடத்தில் வளர்ந்த அவரின் மகள் சிவகாமியும் கூட நினைவு கூறத்தக்கவர்கள். இவர்களை கற்பனை திரையில் வடித்தவர் கல்கி.
காட்சி திரையில் வடித்தவர்கள்..
இயக்குனர் கே.சங்கர், பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம், மெல்லிசை மன்னர் எம்,.எஸ்.விஸ்வநாதன், குரலிசை அரசி பி.சுசிலா, சிவகாமியாக சரோஜாதேவி, சிவகாமியின் செல்வராக எம்.ஜி.ஆர்.
இதுவரையிலும், இனிமேலும் இத்தகைய காட்சி அமைப்புகளை இவர்களை தவிர, வேற யாரும் தரமுடியாது என்பதே திண்ணம். 

Friday, July 3, 2020

Vizhigal Meydaiyam Imaigal ||விழிகள் மேடையாம் இமைகள் || Kalyan, Janaki |...



மனம் கவர்ந்த மலர்கள் - 4

தற்போது கையருகில் இருக்கும் ஆண்ட்ராய்டு போன் திரையில், சுட்டு விரலை தொடடால் போதும்,  எந்நேரமும், படத்துடன் பாடல் விரிகிறது.

ஆனால், 1980 களில், ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியை நெருங்குவதற்காகவே, “பேட்டரி செல்லை” வெயிலில் காய வைத்து காத்திருப்பார்கள்.  சரியாக 4 மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியிலும், விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம், மற்றும் இலங்கை வானொலி நிலைய நிகழ்ச்சிகளில் ஒலிப்பாடல்களை கேட்பதற்காகவே காத்திருந்த காலம் அது.   இதில் பல பாடல்களை கேட்டாலும், சில பாடல்கள் மட்டுமே நினைவில் நிற்கிறது.

“பசி” இயக்குனர் துரை இயக்கிய கிளிஞ்சல்கள் திரைப்படத்திற்கு, டி.ராஜேந்தர் எழுதி, இசையமைத்த பாடலை, டாக்டர். கல்யாணசுந்தரம் – எஸ்.ஜானகி பாட, மோகன் – பூர்ணிமா நடிப்பில், விழிகளில் மேடை அமைத்துள்ளனர். சென்னை திரையங்ககு ஒன்றில், இந்தப்படம் தொடர்ந்து ஒரு ஆண்டு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

பூவண்ணம் போல நெஞ்சம் Poo vannam pola nenjam

மனதை கவர்ந்த மலர்கள் (3)

இசை வடிவமைப்பாளர் சலில் சொளத்ரி,

1923 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் பிறந்த சலில் சொளத்ரி, இளமை பருவத்தில் அசாம் தேயிலை தோட்டங்களில், கிராமிய பாடல்களோடு வாழ்ந்த இவர், கவிஞர், எழுத்தாளர், இசையமைப்பாளர் என அவதாரமெடுத்தார். தனது படைப்புகளில் முற்போக்கு சிந்தனைகளை விதைத்தார். தேச சுதந்திர உணர்வையும், பாட்டாளி மக்களின் எழுச்சியையும் மையமாக வைத்து படைப்புகளை உருவாக்கினார்.

பாரம்பரிய இசையுடன், மேற்கத்திய இசையை கலந்து தனக்கான இசை வடிவை உருவாக்கினார். மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் திரை இசையமைப்பாளராக பணியாற்றிய சொளத்ரி, 1979 ஆம் ஆண்டு, தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” படத்தில் கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு இசையமைத்தார். ஜெயச்சந்திரன் – சிசிலா பாடிய பாடலில், பிரதாப் போத்தன்- ஷோபா ஆகியோர் நடித்தனர். காலவெல்லத்தில் கரையாமல் நிற்கிறது அந்த ராகம்.